கான்பூரின் நவாப்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கான்பூரில் உள்ள கங்கா பேரேஜ் அருகே காதல் ஜோடி ஒன்று சொகுசு பைக்கில் ரொமான்ஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பைக்கை ஓட்டிச்செல்லும் அந்த இளைஞர், தனது காதலியை பெட்ரோல் டேங்கில் உட்கார வைத்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியான நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.