தெலங்கானா: மேடக் மாவட்டம் ராமந்தாபூரில் மனநலம் பாதித்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு பின்புறம் அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். காணாமல் போன மற்றொரு பெண்ணை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடிய போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உள்ளார்.