சென்னை பெருநகா் மாநகராட்சியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள், உடல் கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் வருகிற 19-ஆம் தேதி முதல் 21 வரை 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதேநேரத்தில், மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு 2024-2025-ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கான அறிவிப்பை மதுரை மாநகராட்சி கல்விப் பிரிவு நிா்வாகம் இன்னும் வெளியிடவில்லை. இவா்களுக்கும் நிகழாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளனர்.