இடதுசாரிக்கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம்

62பார்த்தது
இடதுசாரிக்கட்சிகள் சார்பில் மாபெரும் போராட்டம்
மதுரையில் நேற்று மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மதுரை எம்பி சு. வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இதில் மதுரை மெட்ரோ திட்டம், கோவை மெட்ரோ திட்டத்திற்கு எதுவும் பட்ஜட் இல்லை..

கார்ப்பரேட்கள் செலுத்தும் வரி 3-வது இடத்திற்கு சென்றுவிட்டது. ஜிஎஸ்டி வரி முதலிடம், தனிநபர் வரி இரண்டாமிடத்தில் உள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் நாட்டுக்கான பட்ஜெட்டாக இல்லாமல், பாஜக அரசின் நாற்காலிக்கான பட்ஜெட்டாக உள்ளது. இன்றுடன் பட்ஜெட் மீதான விவாதம் முடிவடைகிறது. நாளை விவாதத்தின் மீது நிதியமைச்சர் பதிலளிக்கிறார். இதில் மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால், 2014-ம் ஆண்டு வரை ரயில்வே பட்ஜெட் இருந்தது. தமிழ்நாட்டுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

அநீதியைக் கண்டித்துத்தான் இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்) ஆகியவை ஆகஸ்ட் 1-ல் மறியல் போராட்டத்தை நடத்துகிறோம். மதுரை ரயில் நிலையம், ஒத்தக்கடை, திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

தொடர்புடைய செய்தி