புலியை முறத்தால் அடித்த வீர பெண்கள் நாம், நமது பூமியை தொட விடுவோமா..? என மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு அளித்து பேசிய போது, நான் வந்து கால் வச்சிட்டேன், அவங்க டங்குவார் அறுத்து டின் கட்டி துரத்தி விடுவோம். புலியை முறத்தால் அடித்த வீர பெண்கள் நாம். நம்ம பூமியை தொட விட்ருவோமா? எந்தக் கொம்பனாலும் இந்த மண்ணை தொட முடியாது என்று சூளுரைத்தார்.