மதுரையில் 4 அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்

57பார்த்தது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை(செப்.9) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட வளர்ச்சி மற்றும் அனைத்து திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அதிகாரிகளோடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுகளை நடத்தினார்.

இந்த நிலையில் ஆய்வின்போது சில அரசு அலுவலர்களின் தொய்வான நடவடிக்கைகள் காரணமாக மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் சமையலர் ஆகிய நான்கு பேரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் இரண்டு விடுதி காப்பாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி