மதுரையில் ஜனவரி 25 ம்தேதி தெப்பத்திருவிழா.

1556பார்த்தது
மதுரையில் ஜனவரி 25 ம்தேதி தெப்பத்திருவிழா.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு தை தெப்பத்திருவிழா வருகிற 14-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கோவில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் காலை 10. 50 மணிக்கு மேல் 11. 14 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நடைபெறும் 12 நாட்களும் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கும் காட்சி அளிப்பர்.

தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வருகிற 23-ந்தேதியும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 24-ந்தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது. அன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்று அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10. 40 மணி முதல் 11. 04 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி-அம்மன் தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். பின்னர் இரவு சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி கோவிலுக்கு புறப்படுவார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி