வ. உ. சி சிலைக்கு மாலை அணிவித்த பிரேமலதா விஜயகாந்த்.

76பார்த்தது
வ. உ. சி சிலைக்கு மாலை அணிவித்த பிரேமலதா விஜயகாந்த்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தே. மு. தி. க சார்பாக விஜயகாந்த் பிறந்தநாள் விழா, கட்சி துவக்க நாள் விழா பத்மபூஷன் விருது உள்ளிட்ட முப்பெரும் விழா வாடிப்பட்டி தாதம்பட்டி நீரேத்தான் மந்தையில் நடந்தது.

இந்த விழாவிற்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பாலாஜி வரவேற்றார். இந்த விழாவில் கலந்து கொண்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது

இந்த மதுரை மண் நான் புகுந்த வீடு, புகுந்த வீட்டிற்கு தற்போது வந்துள்ளேன். விஜயகாந்த் இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்று சொல்லிக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அந்த வகையில் சிறுநிகழ்ச்சியோ பொதுக்கூட்டமோ, மாநாடோ, கட்சிகொடிநாள், பிறந்தநாள் என்று எந்த நாள் ஆனாலும் குறைந்தது நூறு குடும்பத்திற்காவது உதவிகள் சென்று சேர வேண்டும் என்பதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அவர் நம்முடன் தான் இருக்கிறார் எங்கும் செல்லவில்லை நம்முடன் உயிர்மூச்சாக கலந்து மனிதராக பிறந்து புனிதராக இருந்து தெய்வமாக நம்முடன் வாழ்ந்து வருகிறார். தமிழக மக்களுக்காகவே அவர் வாழ்ந்தார். மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி