மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே காடுப்பட்டி ரைஸ் மில் ரோடு பகுதியில் வசிக்கும் பிச்சை மணியின் 17 வயது மகள் கடந்த 25 ஆம் தேதி பிளஸ் டூ கடைசி தேர்வு எழுதுவதற்காக முள்ளிப்பள்ளம் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் தேர்வு முடிந்த பின்னரும் வீடு திரும்பவில்லை. இவரை வேறு பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று முன்தினம் (மார்ச் 26) தாயார் பெருமாயி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பிளஸ் டூ மாணவியை தேடி வருகின்றனர்.