SRH அணிக்கு 201 ரன்களை இலக்காக நிர்ணயித்தது KKR அணி. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 15-வது லீக் போட்டியில், டாஸ் வென்ற SRH அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த KKR அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60, ரகுவன்ஷி 50, ரஹானே 38 மற்றும் ரிங்கு சிங் 32* ரன்களை குவித்தனர். SRH தரப்பில் மெண்டிஸ், ஷமி, அன்ஷாரி, ஹர்ஷல் மற்றும் கம்மின்ஸ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.