சோழவந்தான் வர்த்தகர் சங்க ஆலோசனை கூட்டம்.

59பார்த்தது
மதுரை மாவட்டம் சோழவந்தான் வர்த்தகர் நலச்சங்கம் உணவுத்துறை, சுகாதாரத்
துறை, பேரூராட்சி ஆகியோர் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.

இக்கூட்டத்திற்கு, சோழவந்தான் வர்த்தகர் நலச்
சங்கத் தலைவர் ஜவகர்லால், செயலாளர் ஆதிபெருமாள் வரவேற்றார். உணவுத்துறை அலுவலர்கள் ராஜ்குமார், ஜெயக்குமார் ஆகியோர், அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. உணவுத்துறை சம்பந்தமாக லைசன்ஸ் எடுக்காதவர்கள் எடுக்க வேண்டும், லைசென்ஸ் எடுத்து காலாவதியை புதுப்பிக்க வேண்டும் என்றனர். சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில்: கோவில், பள்ளிக் கூடம் அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை மற்றும் புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பலகை வைக்க வேண்டும்,
அரசு தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை விற்பனை செய்யக்கூடாது என்றார்.
பேரூராட்சி துப்புரவு பணி ஆய்வாளர் சூரியகுமார் பேசுகையில் முக்கியமாக போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதையும் மற்றும் பயன்
படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் ஏராளமான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி