சோழவந்தான் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்.

62பார்த்தது
சோழவந்தான் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில்,
முதல் போக சாகுபடிக்கான விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முல்லை பெரியாறு பிரதான பாசனக் கால்வாய் பகுதியில் உள்ள இருபோக பாசன பகுதிக்கு முதல் போக விவசாயம் செய்வதற்கு முதல் போக பாசன பரப்பான 45, 041 ஏக்கர் நிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 900 கனஅடி/வினாடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும்,
75 நாட்களுக்கு முறை
வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 6, 739 மில்லியன் கனஅடி நீர் இருப்பு
மற்றும் நீர்வரத்தை வைகை அணையிலிருந்து தண்ணீரை பொருத்து
கடந்த 3 ஆம் தேதி முதல் வைகை அணையிலிருந்து, திறந்து விடப்பட்டது.

இந்த பாசன கால்வாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்
குட்பட்ட பகுதியில் 1797 ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சார்பில் 16, 452 ஏக்கர் நிலங்களும், மதுரை வடக்கு வட்டம் சார்பில் 26, 792 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகிறது. முல்லை பெரியாறு பாசன கால்வாய்
மூலம் மாவட்டங்களில் உள்ள 45, 041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது,
திறந்து விடப்பட்ட நீரை நம்பி பல்வேறு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது நாற்று நடும் பணிகளை தொடங்கியுள்ளனர்.

சோழவந்தான் அருகே, கட்டக்குளம், மேட்டு நீரேத்தான் ஆகிய பகுதிகளில் வயல் வெளிகளில் ஏர் மாடுகளை கொண்டு உழுதும் பெண்கள் நாற்று நட்டும் மற்றும்
விவசாய பணிகளை தொடங்
கியுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி