மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியில் உள்ள வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 14 விவசாயிகள் கொண்டு வந்த 28 ஆயிரத்து 327 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் 18 வியாபாரிகள் பங்கேற்றனர்.
இதில் மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்று ரூ. 3. 60 முதல் ரூ12. 35 வரை விலை போனது. இந்த ஏலத்தின் மூலம் ரூ. 2 லட்சத்து 8 ஆயிரத்து 776க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் 11 விவசாயிகள் கொண்டு வந்த 1856 கிலோ கொப்பரை ஏலத்தில் 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
கிலோ கொப்பரை தேங்காய் ரூ. 27. 50 முதல் ரூ84. 00 வரை விலை போனது. இதன் மூலம் ரூ. ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 350க்கு வர்த்தகம் நடைபெற்றது.