மதுரை வில்லாபுரம் சங்க விநாயகர் கோயிலில் கார்த்திகை சோமவார பூஜைகள் நேற்று (டிச., 02) நடைபெற்றது. கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை அன்று சிவபெருமானுக்கு சங்கு அபிஷேகம் நடைபெறுவது சிறப்பு. அதேபோல் வில்லாபுரம் சங்க விநாயகர் திருக்கோயிலில் அமைந்துள்ள சிவனுக்கு கார்த்திகை மூன்றாவது சோமாவார சங்கு அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. சங்க விநாயகர் அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.