மதுரை எய்ம்ஸ்.. முதற்கட்ட கட்டட பணிகள்

82பார்த்தது
மதுரை எய்ம்ஸ்.. முதற்கட்ட கட்டட பணிகள்
மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில், 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது என எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோ மீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ளது. கட்டுமான பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ம் ஜனவரி மாதம் பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாவில் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்தி