EVM, VVPAT இயந்திரங்கள் குறித்து பதிலளிக்க தவறிய தேர்தல் ஆணையத்திற்கு மத்திய தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. RTI சட்டத்தின் கீழ் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மைக் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் கேட்ட கேள்விக்கு ஓராண்டு ஆகியும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்காமல் இருப்பது மோசமான விதி மீறல் என மத்திய தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. RTI சட்டத்தின் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதால், இந்திய தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை வழங்க வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.