மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

76பார்த்தது
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடக்கம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக எய்ம்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 18 மாதங்களுக்குள் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். முதல் கட்டமாக மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு, தங்கும் விடுதிகள் ஆகியவை கட்டப்பட உள்ளதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி