நடப்பு
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது. அடுத்தாண்டு
ஐபிஎல் தொடரில்
தோனி விளையாடுவாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில்,
தோனி கால் தசை நார் வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிகிச்சையில் இருந்து குணமாக 5- 6 மாதங்கள் ஆகும் எனவும் அதன்பின்னர்
தோனி தனது எதிர்கால திட்டங்கள் குறித்து யோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.