மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்: ஜெ.பி. நட்டா பதில்

80பார்த்தது
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்: ஜெ.பி. நட்டா பதில்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். கட்டிடமே இல்லாத மருத்துவமனைக்கு அட்மிஷன் மட்டும் நடந்தது குறித்து ஆம் ஆத்மி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நட்டா, நிதிப் பிரச்சனையால் எய்ம்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் முழுவீச்சில் பணிகள் நடந்து வருகிறது. மத்திய அரசு நிதி வழங்குவதில் ஒருபோதும் பாகுபாடு காட்டியதில்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி