உள்நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட கோரியும், பல்வேறு இடங்களில் உள்ள தமிழ் கல்வெட்டுக்களை ஆவணப்படுத்தக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பை வெளியிடக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.