லுலு குழுமத்தின் தலைவர் எம்ஏ யூசுப் அலி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உண்டவல்லியில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று (செப்., 28) நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி உள்ளிட்ட முக்கிய பிராந்தியங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.