ஐபிஎல் டி20 தொடரில் இன்று LSG Vs PBKS அணிகள் மோதும் போட்டி லக்னோவின் வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 74 போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரின் 13 வது ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. தான் எதிர்கொண்ட 2 போட்டியில், 1ல் வெற்றிபெற்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும், 1 போட்டியை எதிர்கொண்டு வெற்றி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் 5 வது இடத்திலும் இருக்கிறது.