குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் - லாவா அறிவிப்பு

85பார்த்தது
குறைந்த விலையில் ஸ்மார்ட் போன் - லாவா அறிவிப்பு
முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா விரைவில் லாவா Yuva5G போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது குறித்து லாவா இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வ ‘X’ தளத்தில் '#Yuva5G- Coming Soon' என்ற டேக் மூலம் தெரிவித்துள்ளது. இந்த போன் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வரும் இந்த போனில் வட்ட வடிவ கேமரா மாட்யூல் உள்ளது. இந்த போன் 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என இரண்டு வகைகளில் வரும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி