மணலில் முட்டையை வேகவைத்து ராணுவ வீரர்.. வைரல் வீடியோ..

63பார்த்தது
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வந்தாலும் வட மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில், அதிகபட்சமாக ராஜஸ்தானில் 48 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு சூரிய ஒளியின் அளவை காட்டும் மணலில் முட்டையை வேகவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ராஜஸ்தானின் பிகானேர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவ வீரர்கள், அங்குள்ள வெயிலின் தீவிரத்தை வெளிப்படுத்த ஒரு முட்டையை மணலில் வைத்து வேகவைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி