தாமிரம் (காப்பர்) அதன் உச்சத்தில் இருந்து 17 சதவீதம் குறைந்துள்ளது. சீனாவில் இருந்து தேவை குறைவு, கிடங்குகளில் தேக்கம் மற்றும் வலுவான அமெரிக்க டாலர் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. பல கிடங்குகளில் தாமிரம் இருப்பு அதிகமாக உள்ளது. சீனாவின் கிடங்குகளும் 4 ஆண்டுகளுக்கு தேவையான தாமிரம் இருப்பு வைத்துள்ளன. சீனாவின் தாமிரத்திற்கான தேவை இந்த ஆண்டு ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் வரை மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.