கர்நாடகா: பெட்ரோல் டேங்கில் காதலியை அமர வைத்து பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர், தனது பைக் பெட்ரோல் டேங்கில் காதலியை அமர வைத்து கட்டியணைத்தபடியும், முத்தமிட்டுக் கொண்டும் பயணம் செய்தார். இதன் வீடியோ வைரலாக அஜித்குமாரை சர்ஜாப்புரா போலீசார் கைது செய்தனர். மேலும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.