உத்திரப் பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த ஹசீன் என்ற நபர் தனது 16 வயது சகோதரிக்கு இந்து இளைஞருடன் தொடர்பு இருப்பதை அறிந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் தனது சகோதரியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இந்த கொலையை அவர் பட்டப்பகலில் சாலையில் வைத்து செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.