ஜோதிடத்தில், சுக்கிர பகவான் செல்வம், பெருமை, செழிப்பு மற்றும் குடும்ப வாழ்க்கைகுறிய கிரகமாக உள்ளார். சுக்கிரனின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஒவ்வொரு ராசியிலும் மாற்றங்கள் ஏற்படும். இன்று ஏப்ரல் 1ஆம் தேதி சுக்கிரன் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இதனால், ரிஷபம், கும்பம், மகரம் ஆகிய ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் உங்கள் ஆளுமை மேம்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை மிக எளிதாக தீரும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.