எதிர்காலத்தில் பலகோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் - சசிகாந்த் செந்தில்

84பார்த்தது
எதிர்காலத்தில் பலகோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் - சசிகாந்த் செந்தில்
திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தனது எக்ஸ் பதிவில், 2029-30 ஆண்டில் இந்தியாவின் GIG பணியாளர்களின் எண்ணிக்கை 23.5 கோடியாக இருக்கும் என மத்திய அரசின் NITI Aayog அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி. ஆனால் தற்போது GIG பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசிடம் உறுதியான தரவுகள் இல்லை. உள்ளங்கையில் உங்களுக்கான சேவை எனப் பயனாளர்களைக் கவரும் நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் உரிமைகளை மறுக்கின்றன என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. அதனை நிரூபிக்கும் வகையில் தான் ஆன்லைன் நிறுவனங்கள் விதிக்கும் விதிமுறைகளும் பணிபுரிய வேண்டிய வழிமுறைகளும் கொடுமையானதாக இருக்கின்றன. உழைத்தும் கையில் ஏதும் மிஞ்சவில்லை என்ற கொடுமையிலிருந்து GIG பணியாளர்களை மீட்டெடுக்க வேண்டியது நமது பொறுப்பு. ஆன்லைன் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டங்களை நம்நாட்டில் இயற்றப்பட வேண்டும். இதை நாம் இப்போது செய்யாவிட்டால், எதிர்காலத்தில் பலகோடி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நிச்சயம் நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்விகள் எழுப்பப்படும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி