சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

76பார்த்தது
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் உற்சவ அம்மன் சிம்ம வாகனம் பூத வாகனம் அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி