தமிழ்நாட்டில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.