சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள "லால் சலாம்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் நடிகர்
ரஜினிகாந்த் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த இசை வெளியீட்டு விழாவில் அவர் எது குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. படத்தை ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.