பாத்ரூம் டைல்ஸ் மற்றும் சுவர்களில் அதிகப்படியாக படிந்திருக்கும் உப்புக் கறைகளை எளிய முறையில் அகற்றலாம். ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் கல் உப்பு, அதனுடன் எலுமிச்சை சாறு, துணி துவைக்க பயன்படும் சோப்புத்தூள், 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கிரீம் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை கொண்டு பாத்ரூமை நன்றாக தேய்த்து 10 நிமிடம் ஊறவிடவும். பின்னர் தண்ணீர் ஊற்றி கழுவினால் கறைகள் மறைந்து காணாமல் போய்விடும்.