கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்க்க படகில் செல்லும் சுற்றுலா பயணிகள் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு ஆகியவற்றின் காரணமாக, அங்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ரூ.37 கோடி செலவில் கடல்சார் கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.