முன்பொரு காலத்தில் சமயபுரத்து மாரியம்மன் வைஷ்ணவி என்ற பெயரில் அரங்கனின் தங்கையாக ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் சன்னதி கொண்டிருந்தார். எதிரிகளிடமிருந்து அம்பாளை மறைத்து வைப்பதற்காக பக்தர்கள் பள்ளக்கில் ஏற்றிச் சென்றனர். அப்போது பல்லக்கை சுமந்து சென்றவர்கள் ஓய்வெடுக்க இறக்கி வைத்த போது மீண்டும் பல்லக்கை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. இதனால் அம்பாளை அங்கேயே குடியமர்த்தி, கோயில் எழுப்பி சமயபுரம் மாரியம்மனாக வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.