வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டலாம். அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் காபி பொடி இரண்டையும் கலந்து பசை போல மாற்றிக் கொள்ளவும். இந்தக் கலவையை பிரியாணி இலையில் தேய்த்து காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் இந்த இலையை பற்ற வைத்து வெளியாகும் புகையை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இந்த வாசனைக்கு கொசுக்கள் வராமல் வெளியேறிவிடும். இயற்கை முறையில் கொசு விரட்டி பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கும் இல்லை.