புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,000 ஏக்கரில் செங்கரும்பு என்று அழைக்கப்படும் பொங்கல் கரும்பு விவசாயம் செய்வது வழக்கம். இதை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அரசு ரேஷன் கடை மூலமாக விநியோகம் செய்யும். ஆனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும், மழை காரணமாகவும் 1,000 ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் கரும்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.