கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி மற்றும் அலுவலர்கள் வேப்பனப்பள்ளி மகராஜகடை சாலையில் ரோந்து சென்ற போது அங்குள்ள ஒரு குவாரியில் அனுமதி இன்றி கற்கள் வெட்டி எடுத்த பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வேப்பனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.