கல்குவாரியை அகற்ற வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

63பார்த்தது
கல்குவாரியை அகற்ற வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த கொத்தூர் கிராமம். இந்தக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமம் அருகே பல ஆண்டுகளாக தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடியால் அருகில் உள்ள குடியிருப்புகள் சேதம டைவதாகக் கூறி பல முறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கையில்லை என்று நேற்று (ஆக.,31) கிராம மக்கள் தனியார் கல் குவாரியை அகற்றக் கோரி, தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்தததும் கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவளத் துறை வட்டாட்சியர் ஜெயபாலன், பர்கூர் வட்டாட்சியர், மற்றும் காவல் துறையினர் கிராமத்ற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையெடுத்து, கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி