கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜாமத்திற்கு, சொந்தமான ரசூல் மஸ்ஜித் அருகில் உள்ள அடக்கஸ்தளத்தின் பழுதடைந்துள்ள சுற்று சுவர் கட்டுவதற்க்கு 10, லட்சம் மதிப்பீட்டில் பாத்தியா மற்றும்துவா கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி தவுலதாபாத் சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமான ரசூல் மஸ்ஜித் வளாகத்திலுள்ள அடக்கஸ்தளத்தின் பழுதடைந்துள்ள சுற்று சுவர் கட்டுவதற்கு ஜமாத் மற்றும் இஸ்லாமிய பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து ரூ10, லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பாத்தியா மற்றும் துவா (பூமி பூஜை) நடைபெற்றது.
இந்த பாத்தியா துவா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சிறுபாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல் தலைமையில் நடைபெற்றது.. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட செயலாளருமான அசோக்குமார் கலந்து கொண்டு பாத்தியா மற்றும் பூமி பூஜையை தொடக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த விழாவில் நகர செயலாளர் கேசவன், அவைத் தலைவர் காத்தவராயன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயா ஆஜி,
இளைஞர் அணி சரவணன், மற்றும்தவுலதாபாத் சுன்னத் ஜாமத் கமிட்டியின் தலைவர் கவுஸ் ஷெரிப், செயலாளர்அஸ்லம் பாட்ஷா, பொருளாளர் சனாவுல்லா, மற்றும் நிர்வாக கமிட்டி நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.