நேஷனல் இன்சூரன்ஸின் தூய்மை இந்தியா தூய்மைப் பணி முகாம்

50பார்த்தது
நேஷனல் இன்சூரன்ஸின் தூய்மை இந்தியா தூய்மைப் பணி முகாம்
கிருஷ்ணகிரி நேஷனல் இன்சூரன்ஸ் பிரைவேட் லிட்டின் சார்பாக தூய்மை இந்தியா இயக்க தூய்மை பணி முகாம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்றது.

விழாவிற்கு நேஷனல் இன்சூரன்ஸ் தமிழக துணைப் பொது மேலாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். தமிழக ரீஜினல் மேலாளர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் கலந்துக் கொண்டு முதலமைச்சர் கோப்பை மற்றும் மாவட்ட செஸ் போட்டிகளை விளக்கினார். அன்றைய நாளில் அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களை வெகுவாக பாராட்டுக்களை நேஷனல் இன்சூரன்ஸ் சார்பாக சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர்.

பின்பு மாவட்ட விளையாட்டு அலுவலர் முன்னிலையில் தூய்மை இந்தியா பணியை நேஷனல் இன்சூரன்ஸ் தமிழக துணைப் பொது மேலாளர் மகாலட்சுமி துவக்கி வைத்தார். ரீஜினல் மேலாளர் ஜெயஸ்ரீ, கிருஷ்ணகிரி கிளை மேலாளர் பாரதிராஜா, துணை மேலாளர் இரங்கராஜன், அலுவலர் ஜீவானந்தம், முனிராஜ், முன்னாள் வளர்ச்சி அதிகாரி கௌதம் , நேஷனல் இன்சூரன்ஸ் முகவர்கள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தூய்மைப் பணி செய்தனர். நிறைவில் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை ஜேசீஸ் நிறுவனர் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி