விசிக சார்பில் மது, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு.

77பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதை பொருள் மகளிர் மாநாட்டையொட்டி ஊத்தங்கரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் நான்கு முனை சந்திப்பில் இருந்து முக்கிய வீதிகளில் வழியாக மது மற்றும் போதை பொருள் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது,
போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடு,
மது போதை பொருட்கள் ஒழிப்பு பரப்புரையில் மகளிர் சுய உதவி குழுக்களை ஈடுபடுத்திடு, குடிபோதை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மறுவாழ்வளிக்கவும் ஏற்பாடு செய் என பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்ட மேலிட பார்வையாளர்கள் தகடூர் தமிழ்செல்வன், ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மதுக்கடைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் தடை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் ஜெயலட்சுமி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணை செயலாளர் அசோகன், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ் ஏராளமான மகளீர்கள் கலந்து கொண்டு மதுபானத்தை சாலையில் ஊற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி