ஜெகதேவி
பாலவிநாயகர் பாலமுருகன் ஆலயத்தின் 79 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை பெருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஜெகதேவி கிராமத்தில்
சித்துக் குன்றின் மேல் எழுந்தருளி யிருக்கும் அருள்மிகு பால விநாயகர் அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தின் 79 ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை புஷ்பக் காவடி மயில் காவடி திருவிழா நடைபெற்றது , ஆடி மாதத்தில் 13 ஆம் நாள்
ஆடி கிருத்திகை
யொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து முருகர் கோயில்களில் பக்தர்கள் புஷ்பகாவடி, மயில் காவடி எடுத்து முருகன் கோயிலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர் இன்று ஜெகதேவியில் அமைந்திருக்கும் பால வினாயகர் பாலமுருகன் திருக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அழகு குத்தி, மஞ்சள் இடித்தும் குழந்தைகளுக்கு எடைக்கு எடை பணத்தை நேர்த்திக் கடனை செலுத்தியும், மொட்டை அடித்து தங்களுடைய நேர்த்திக்கடனை ஏராளமான பக்தர்கள் செலுத்தினர். நிகழ்ச்சியில் மதிகடாசூர சம்ஹாரம் விநாயகர் கல்யாணம் சங்கரி சிவசங்கரியின் நடன நிகழ்ச்சி சுவாமிக்கு மூன்று நாள் பூமாலைகள் பரதநாட்டியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்று சென்றனர்.