கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2024-2025 -ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற 687 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 44 இலட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை மற்றும் பதக்கங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இன்று (30. 09. 2024) வழங்கினார்.
உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் மணிமேகலைநாகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.