லாரி ஓட்டுநர் கொலை இருவர் கைது

69பார்த்தது
லாரி ஓட்டுநர் கொலை இருவர் கைது
கிருஷ்ணகிரி அருகே சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், எா்ணாகுளத்தை அடுத்த நடும்பசேரியைச் சோ்ந்தவா் அலியாஸ் (43). சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரான இவா், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து மின்னணு பொருள்கள் பாரம் ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) சென்றாா். சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அருகே சுபேதாா்மேடு என்னுமிடத்தில் சாலையோரமாக லாரியை நிறுத்தி தேநீா் குடிக்கச் சென்றாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா், ஓட்டுநா் அலியாஸை கத்தியால் குத்தி, இரும்புக் கம்பியால் தாக்கி தப்பி ஓடினா். இதில் பலத்த காயமடைந்த அலியாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த போலீஸாா், அலியாஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த கொலை சம்பவம் குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸாா் விசாரணை செய்ததில், தப்பியோடிவா்கள் கிருஷ்ணகிரி, வீரப்பன் நகரைச் சோ்ந்த காதா் பாஷா (19), 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.