கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பேருந்து பணிமனையில் நடத்துனராக பணிபுரியும் குமரன் (55). அவரது மகன் தமிழ்வாணன் ஆகியோர் அரசு பணி வாங்கி தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் மொத்தம் ரூ1. 5 கோடி வசூல் செய்துள்ளதாகவும், வேலை வாங்கி தராமல் காலம் கடத்தி பணத்தை திருப்பி கேட்டபோது தர முடியாது என மிரட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்தனர். மனுவை விசாரித்த ஊத்தங்கரை போலீசார், நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுரை கூறினர்.