கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த பேட்டராயசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நித்யாராதனம். பாராயணங்கள். பிரதிஷ்டாபன ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தலைமை அர்ச்சகர்கள் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதன் பின் ஹெலிகாப்டர் கோவிலை 3 முறை வட்டமிட்டு கோபுரங்கள் மீது மீதும் பூக்கள் தூவப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.