சிறந்த மருத்துவர் விருது பெற்ற நமது மருத்துவர் ராஜேஷ்குமார்

62பார்த்தது
சிறந்த மருத்துவர் விருது பெற்ற நமது மருத்துவர் ராஜேஷ்குமார்
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மருத்துவர் தினத்தை (2024) ஒட்டி மருத்துவத்துறையில் 2019- ஆண்டு முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் மகத்தான பணிகளை ஆற்றிய 105 சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. சுப்ரமணியம் அவர்கள் பங்கேற்று கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமாருக்கு சிறந்த மருத்துவர் என்ற விருதை வழங்கினார்.

விருது பெற்ற ராஜேஷ் குமாருக்கு கெலமங்கலம் தேன்கனிக்கோட்டை பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி