ஓசூர் முனீஸ்வரன் நகரில் பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா

82பார்த்தது
ஓசூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட முனீஸ்வரன் நகர் நுழைவுவாயில் பகுதியில் தினமும் பள்ளி, கல் லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்துக்காக வெயில் மற்றும் மழையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து 22-வது வார்டுக்குட்பட்ட குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் ஓசூர் சிப்காட் அரிமா சங்கம் சார்பில் ரூ. 4லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 22-வது வார்டு நுழைவுவாயில் பகுதியில் பதிய நிழற்கூடம் கட்டப் பட்டு திறப்பு விழா நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி நிழற்கூடத்தை திறந்து வைத்தார். இதில் முனீஸ்வரன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி