கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதியம்மாள் (45). இவர் கடந்த 2ஆம் தேதி. அவர் வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலுக்குச் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் பூட்டை திறந்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வந்த நிலையில் கொள்ளை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பெண்டாரஅள்ளியை சேர்ந்த முகமது சித்திக் (26) என்பவரை போலீசார் நேற்று(ஆக.30) கைது செய்தனர். அவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.